இந்திய உச்ச நீதிமன்றமானது, 17 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பிரதேச அரசுகளிடம், 1909 ஆம் ஆண்டு ஆனந்த் திருமணச் சட்டத்தின் கீழ் சீக்கியத் திருமணங்களைப் பதிவு செய்வதற்கான விதிகளை 4 மாதங்களுக்குள் வகுக்க உத்தரவிட்டுள்ளது.
அதற்கான விதிகள் வகுக்கப்படும் வரையில், மாநில அரசுகள் ஆனது சீக்கியத் திருமணங்களுக்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை உறுதி செய்து, ஆனந்த் கராஜ் திருமணங்களை ஏற்கனவே உள்ள சட்டங்களின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
ஆனந்த் திருமணச் சட்டம் (1909) ஆனது சீக்கியத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்தாலும், ஆரம்பத்தில் அந்தச் சட்டத்தில் பதிவுகளுக்கான வழிமுறைகள் இல்லை.
2012 ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் மாநில அரசுகள் பதிவுகளுக்கான விதிகளை உருவாக்க கட்டாயப்படுத்தியது.
இருப்பினும், இந்தச் சட்டத்தில் விவாகரத்து அல்லது திருமணத் தகராறுகள் குறித்து குறிப்பிடப் படாததால் அதில் இடைவெளிகள் உள்ளன.
சீக்கியத் தலைவர்கள் சமயம் சார்ந்த பழக்கவழக்கங்கள் மற்றும் சட்ட உரிமைகளை முழுமையாகக் கையாளும் ஒரு விரிவான சட்டத்தை உருவாக்குமாறு வலியுறுத்தச் செய்கின்றனர்.