தெலுங்கானா அரசின் சீதா ராமா நீரேற்று நீர்ப்பாசனத் திட்டத்திற்கான பசுமை அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நீரேற்று பாசனத் திட்டம் ஏற்கனவே உள்ள தும்முகுடெம் பாசன அணைக்கட்டுப் பகுதியிலிருந்து நீரோட்டத்திற்கு எதிராக கோதாவரி நதிக்கு நீரைப் பிரித்து அனுப்பும். இதன் மூலம் தெலுங்கானாவின் பத்வாரி கோதகுடெம், கம்மம் மற்றும் மகபூபாபாத் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2,72,921 ஹெக்டேர் நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறும்.
இத்திட்டத்தின் நோக்கமானது, பாசனத்திற்காக நீரை வழங்குவது மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள மற்றும் முன்மொழியப்பட்ட பாசனத் திட்டங்களுக்கும் அது செல்லும் வழியில் உள்ள நீர்த் தொட்டிகள், கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கும் நீரை வழங்குவது ஆகும்.