ஆயுஷ் அமைச்சகமானது, சீந்திலக் கொடி (கிலோய்) என்ற மருத்துவத் தாவரத்தினை இயற்கை மூலிகையாகப் பயன்படுத்துபவர்கள் அனைவரையும் எச்சரித்துள்ளது.
அவற்றை கவனமாகப் பயன்படுத்தவும், சீந்திலக் கொடி போன்று தோற்றமளிக்கும், ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய தாவரங்களைத் தவிர்க்கவும் வேண்டி அமைச்சகம் கோரியுள்ளது.
குடுச்சி என்றும் அறியப்படும் இத்தாவரத்தின் அறிவியல் பெயர் ‘டினோஸ்போரா கார்டிஃபோலியா’ (Tinospora Cordifolia) என்பதாகும்.
இது ஆயுஷ் மருத்துவமுறையின் சிகிச்சைகளில் நீண்டகாலமாக பயன்படுத்தப் படுகிறது.
ஆனால் துரதிருஷ்டவசமாக டினோஸ்போரா குடும்பத்தினைச் சேர்ந்த (டினோஸ் போரா கிரிஸ்பா) சீந்திலக் கொடி போன்று தோற்றமளிக்கும் தாவரங்கள் சீந்திலக் கொடி என்று தவறாக கருதப் படுகின்றன.