TNPSC Thervupettagam

சீனாவின் தியாங்காங் விண்வெளித் திட்டம்

April 27 , 2026 4 days 80 0
  • சீனாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தில் வெளிநாட்டு விண்வெளி வீரர்களை முதன்முறையாகச் சேர்க்கும் விதமாக, தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கான பயிற்சிக்காக பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு விண்ணப்ப தாரர்களை சீனா தேர்ந்தெடுத்துள்ளது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது ஜீஷன் அலி மற்றும் குர்ரம் தாவூத் ஆகியோர், இருதரப்பு விண்வெளி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சீனாவில் முழுமையான பயிற்சி மற்றும் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவார்கள்.
  • இவர்களில் ஒருவர் எதிர்கால விண்வெளிப் பயணத்தில் பயனுறு சுமை நிபுணராகத் தேர்ந்தெடுக்கப்படலாம், இதன் மூலம் பூமியின் சுற்றுப்பாதையை அடையும் முதல் பாகிஸ்தானி என்ற பெருமையை அவர் பெறக்கூடும்.
  • சீனாவின் மனித விண்வெளி முகமைக்கும் (CMSA), பாகிஸ்தானின் விண்வெளி மற்றும் வளிமண்டல மேல் அடுக்கு ஆராய்ச்சி ஆணையத்திற்கும் (SUPARCO) இடையிலான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்