TNPSC Thervupettagam

சீனாவின் விலங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை

June 2 , 2026 11 days 82 0
  • மனித நோயாளி ஒருவருக்கு பன்றியின் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை ஒரே நேரத்தில் மாற்று அறுவை சிகிச்சை செய்து சீனா உலகிலேயே முதல்முறையாக வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
  • மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உறுப்புகளில் மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரண்டு பன்றி சிறுநீரகங்களும், மரபணு திருத்தம் செய்யப்பட்ட ஒரு பன்றி கல்லீரலும் அடங்கும்.
  • விலங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது உயிருள்ள செல்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை ஒரு சிற்றினத்திலிருந்து மற்றொரு சிற்றினத்திற்கு மாற்றுவதாகும்.
  • மனித உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அந்த உறுப்புகளை நிராகரிப்பதைக் குறைக்கவும், மனிதர்களுடனான இணக்கத்தன்மையை மேம்படுத்தவும் பன்றி உறுப்புகளில் ஆறு மரபணுக்களை அறிவியலாளர்கள் மாற்றியமைத்தனர்.
  • பன்றியின் உறுப்புகளின் அளவு மற்றும் உடலியல் பண்புகள் மனிதர்களின் பண்புகளைப் போலவே இருப்பதால், அவை விலங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆராய்ச்சியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்