சீனாவின் EAST (Experimental Advanced Superconducting Tokamak) இணைவு உலை, அணுக்கரு இணைவு ஆராய்ச்சியில் ஒரு முக்கியத் தடையாக உள்ள கிரீன்வால்ட் அடர்த்தி வரம்பை தாண்டியது.
சூரியனின் செயல்முறையைப் போலவே, ஹைட்ரஜன் கருக்களை ஹீலியமாக இணைப்பதன் மூலம் அணுக்கரு இணைவு ஆற்றலை உருவாக்குகிறது.
கிரீன்வால்ட் அடர்த்தி வரம்பு, டோகாமாக் உலை பாதுகாப்பான வரம்பு வரை தாங்கக் கூடிய அதிகபட்ச பிளாஸ்மா அடர்த்தி என்பதை வரையறுக்கிறது.
சீனாவின் EAST உலை, கிரீன்வால்ட் வரம்பை விட சுமார் 65% அதிக பிளாஸ்மா அடர்த்தியை அடைந்தது.
டோகாமாக் என்பது அதி வெப்பமான பிளாஸ்மாவை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப் படும் டோனட் வடிவ காந்த சாதனமாகும்.
எலக்ட்ரான் சைக்ளோட்ரான் ரெசோனன்ஸ் ஹீட்டிங் (ECRH) மற்றும் லித்தியம் பூசப் பட்ட டங்ஸ்டன் சுவர்களைப் பயன்படுத்தி இந்த நிகழ்வு செயல்படுத்தப்பட்டது.
இந்தச் சாதனை இந்தியாவைப் பங்குதாரராகக் கொண்ட உலகளாவிய அணுக்கரு இணைவு திட்டமான ITER (சர்வதேச வெப்ப அணுக்கரு பரிசோதனை உலை) மீது தாக்கங்களைக் கொண்டுள்ளது.