சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசு – முன்னிலை கொள்கைக் குழுக்கள்
February 21 , 2019 2489 days 789 0
2018 ஆம் ஆண்டின் கொள்கைக் குழுவிற்கான குறியீட்டு அறிக்கையில் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசின் முன்னிலை கொள்கைக் குழுக்கள் என்ற பிரிவில் அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகளை உருவாக்கும் இந்து மையமானது 33-வது இடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் லாடர் நிறுவனத்தில் உள்ள கொள்கைக் குழுக்கள் மற்றும் மக்கள் சமுதாயத் திட்டம் என்ற அமைப்பால் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையின்படி, அதிக எண்ணிக்கையிலான கொள்கைக் குழுக்கள் அமெரிக்காவில் உள்ளன. இதற்கு அடுத்து இந்தியா (509), சீனா (507), ஜப்பான் (128) மற்றும் தென் கொரியா (60) ஆகிய நாடுகள் உள்ளன.
“தி இந்து” குழுமத்தின் ஒரு பகுதியான அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகளை உருவாக்கும் இந்து மையமானது அப்போதைய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியினால் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று திறந்து வைக்கப்பட்டது.