சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சாக்லேட்டுகள் உள்பட பால் மற்றும் அவற்றிலிருந்துப் பெறப்படும் பொருட்களை உள்நாட்டில் இறக்குமதி செய்வதற்கானத் தடையை இந்தியா நீட்டித்துள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாலில் மெலமைன் இருப்பதாக சந்தேகிக்கப் படுகின்றது.
துறைமுக சோதனை நிலையங்களில் உள்ள அனைத்து ஆய்வகங்களின் திறனானது “மெலமைன்” சோதனைக்குத் தகுதியுடையதாக மேம்படுத்தப்படும் வரை இந்தத் தடையானது நீட்டிக்கப்பட இருக்கின்றது.
மெலமைன் என்பது நெகிழிப் பொருட்கள் மற்றும் உரங்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு நச்சு இரசாயனமாகும்.
மெலமைனானது விலங்குகளின் சிறுநீர் பைகளில் கற்களை உருவாக்கும்.
இது மனிதர்களிடத்திலும் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தும்.
உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் மற்றும் பால் நுகர்வாளராக இந்தியா விளங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா 150 மில்லியன் டன் பாலை உற்பத்தி செய்கின்றது.
பால் உற்பத்தியில் உத்தரப் பிரதேச மாநிலம் முன்னணியில் உள்ளது. இதற்கு அடுத்து இராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.