சீனா மற்றும் பிரிட்டின் ஒத்துழைப்பிற்கான உறுதிமொழி
December 17 , 2017 2949 days 1165 0
பெங்ஜிங்கின் நாணயத்தின் வெளிநாட்டு பயன்பாட்டிற்கான ஒரு மையமாக லண்டனை பயன்படுத்திட பிரிட்டனும், சீனாவும் உறுதி பூண்டுள்ளன.
பிரிட்டன் ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறும் இந்த தருணத்தில் இவ்விரு நாடுகளும் தூய்மையான ஆற்றலிற்கான ஆய்வு மற்றும் வர்த்தக மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைக்க உறுதி பூண்டுள்ளன.
இரு தரப்பும் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள சீனாவின் யுவான் நாணயத்தை சர்வதேச அளவில் பயன்படுத்திடவும் யுவான் சார்ந்த வியாபார நடவடிக்கைகளை லண்டனில் மேம்படுத்திடவும் ஒத்துக் கொண்டுள்ளன.
இரு தரப்பு அதிகாரிகளும் சீனாவின் “பட்டை மற்றும் சாலை “(Belt and Road Initiative) திட்டத்தில் பிரிட்டினின் பங்கை அதிகரிப்பதற்கான வழிகளை ஆய்வு செய்வதற்கும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இத்திட்டமானது, இரயில் பாதைகள், துறைமுகங்கள் மற்றும் இதர உள்கட்டமைப்புகள் மூலமான வர்த்தகத்தை ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு விரிவாக்கம் செய்யும் பரந்த திட்டமாகும்.