TNPSC Thervupettagam

சீமை கருவேலம் (Prosopis juliflora) ஒழிப்பு

March 24 , 2026 3 days 140 0
  • தமிழ்நாட்டில் சீமை கருவேல மரங்களை (ஆக்கிரமிப்பு அந்நிய இனம்) அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • சீமை கருவேலம் என்பது அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட மற்றும், காலனித்துவ காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தாவரமாகும்.
  • இது ஃபேபேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர் அல்லது சிறிய மரம், ஒரு வகையான மெஸ்கிட் ஆகும்.
  • இது மெக்சிகோ, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது.
  • இது வறண்ட மற்றும் மித வறண்டப் பகுதிகளில் வேகமாக வளர்கிறது மற்றும் பூர்வீக தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
  • இத்தாவரம் அதிகப்படியான நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது மற்றும் மண்ணின் தரத்தை குறைக்கிறது.
  • இதன் பரவல் பல்லுயிர் பெருக்கத்தைக் குறைத்து உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதிக்கிறது.
  • இந்த உத்தரவு பூர்வீகத் தாவரங்களை மீட்டெடுக்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அனைத்து தனியார் நில உரிமையாளர்களும் 30 நாட்களுக்குள் தங்கள் நிலத்திலி இருந்து செடிகளை அகற்ற வேண்டும், அதன் பிறகு, அதிகாரிகள் அதனை அகற்றி, அதற்கான செலவுகளை வசூலிப்பார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்