TNPSC Thervupettagam

சீரான GSVA வழிகாட்டுதல்கள்

May 15 , 2026 15 hrs 0 min 32 0
  • தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO), 2022–23 ஆம் ஆண்டைப் புதிய அடிப்படை ஆண்டாகக் கொண்டு, மொத்த மாநில மதிப்பு கூடுதல் (GSVA) மதிப்பீடுகளைத் தயாரிப்பதற்கான சீரான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தப் புதிய கட்டமைப்பானது, அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பீடுகளின் துல்லியம், நிலைத்தன்மை மற்றும் ஒப்பீட்டுத் தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • திருத்தப்பட்ட இந்த முறையானது, மாறிலி விலை மதிப்பீடுகளுக்கு ஒற்றை-பணவா ட்டத்திற்கு பதிலாக மறுமதிப்பீடு, இரட்டைப் பணவாட்டம் மற்றும் அளவு கணிப்பு முறைகளைப் பயன்படுத்துகிறது.
  • இக்கட்டமைப்பு சரக்கு மற்றும் சேவை வரி (GST), வருடாந்திரத் தொழில் ஆய்வு (ASI), காலமுறை தொழிலாளர் படை ஆய்வு (PLFS) மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு (ASUSE) போன்ற தரவு ஆதாரங்களைப் பயன்படுத்துகிறது.
  • மொத்த மாநில மதிப்பு கூடுதல் (GSVA) என்பது ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்யப் படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பில் இருந்து உள்ளீட்டுச் செலவுகளைக் கழித்த பிறகு கிடைக்கும் மதிப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்