சீரொளிக் கற்றையிலிருந்து பாதுகாப்பதில் தேக்கு இலைச் சாற்றின் பயன்பாடு
July 6 , 2025 6 days 36 0
பெங்களூருவிலுள்ள இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (RRI) அறிவியலாளர்கள் தேக்கு இலை சாறு ஆனது, மிகவும் வலுவான சீரொளிக் கற்றையின் கதிர்வீச்சிலிருந்து கண்கள் மற்றும் உணர்வு அமைப்புகளைப் பாதுகாக்க முடியும் என்பதைக் கண்டு அறிந்தனர்.
மிகப் பொதுவாக வேளாண் கழிவுகளாகக் கருதப்படும் தேக்கு இலைகள், சிறப்பு நேரியல் அல்லாத ஒளியியல் (NLO) பண்புகளை (ஒளியின் தீவிரத்தினைப் பொறுத்து பண்புகள் மாறும் இயல்பு) கொண்ட அந்தோசயனின்கள் எனப்படுகின்ற இயற்கை நிறமிகளைக் கொண்டுள்ளன.
மிகவும் ஒரு தீவிரமான சீரொளிக் கற்றையை (லேசர்) ஒளியை உறிஞ்சும் இந்தச் சாறு தலைகீழ் நிறைவுற்ற ஒளி உறிஞ்சுதல் பண்பை (RSA - ஒளியின் தீவிரம் அதிகரிக்கும் போது பொருளின் ஒளி உறிஞ்சும் தன்மையை அதிகரித்தல்) கொண்டுள்ளது என்ற ஒரு நிலையில், இது அந்த சீரொளிக் கற்றையிலிருந்துப் பாதுகாப்பதற்குப் பயனுள்ளதாக அமைகிறது.
இந்த இயற்கை சாயம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது, மக்கும் தன்மை கொண்டது மற்றும் சீரொளிக் கற்றையிலிருந்து பாதுகாப்பதற்குப் பயன்படுத்தப்படும் பல செயற்கைப் பொருட்களுடன் ஒப்பிடும் போது மலிவானதாகும்.