காசாவில் நடைபெற்று வரும் போரின் போது எதிரி நாட்டின் ஆளில்லா வகையான விமானங்களை வீழ்த்த சீரொளிக் கற்றை (லேசர்) ஆயுதங்களைப் பயன்படுத்திய உலகின் முதல் நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது.
Iron Beam என வெகுவாக அழைக்கப்படும் இது மேகன் எனப்படும் அதன் எபிரேய மொழிப் பெயராலும் அறியப்படுகிறது.
இது அந்நாட்டிடம் ஏற்கனவே உள்ள இரும்புக் கவசம், டேவிட் ஸ்லிங் மற்றும் ஆரோ போன்ற அமைப்புகளுடன் துணையாக அமையும்.
இந்த சீரொளிக் கற்றை ஆயுத அமைப்புகள் ஆனது, ஆளில்லா விமானங்கள் போன்ற எதிரி நாட்டின் மலிவான இலக்குகளை அழிப்பதற்காக என விலையுயர்ந்த எறிகணை இடைமறிப்பு அமைப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால் இவற்றின் அதிகபட்சத் தாக்குதல் வரம்பு சுமார் 10 கிலோ மீட்டராக உள்ளதால் இது Iron Dome அமைப்பின் 40 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை விட குறைவானதாகும்.
ரஷ்யா (Peresvet), அமெரிக்கா (HELIOS), சீனா (Hurricane-3000), ஐக்கியப் பேரரசு (DragonFire) மற்றும் இந்தியா (IDD&IS) Mk2A ஆகியவை இதே போன்று இயங்கும் உலகின் மற்ற சில அமைப்புகளாகும்.