TNPSC Thervupettagam

சீர்காழி கோயிலில் செப்புத் தகடுகள்

October 27 , 2025 9 days 62 0
  • தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறையானது (TNSDA), தேவாரப் பாடல்கள் பொறிக்கப் பட்ட 483 செப்புத் தகடுகளை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
  • மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோயில் என்றும் அழைக்கப் படும் தோணியப்பர் கோயிலின் மேற்கு கோபுர நுழைவாயிலுக்கு அருகில் இந்தத் தகடுகள் மற்றும் 23 பஞ்சலோகச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
  • ஒவ்வொரு தகட்டிலும், இருபுறமும் கல்வெட்டுகள் மற்றும் குறிப்பிட்ட தொடர் வரிசை இல்லாமல் வெவ்வேறு எழுத்தாளர்களால் பொறிக்கப்பட்ட 10 முதல் 12 வரி பாடல்கள் உள்ளன.
  • சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் பாடல்கள், சைவ சமய துறவி கவிஞர்களான திருநாவுக்கரசர் (அப்பர்), திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆகியோரால் இயற்றப் பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்