TNPSC Thervupettagam

சுகாதாரக் குறியீடு

June 27 , 2019 2192 days 1012 0
  • நிதி ஆயோக் “சுகாதாரமான மாநிலங்கள், முன்னேறுகின்ற இந்தியா” என்ற அறிக்கையின் 2-வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
  • இது 2015-16 (அடிப்படை ஆண்டு) மற்றும் 2017-18 (ஆதார ஆண்டு) ஆகிவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 21 பெரிய மாநிலங்களைப் பகுப்பாய்வு செய்தது.
  • இந்தத் தரவரிசை 3 பிரிவுகள் (பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள்) மற்றும் 10 கூறுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இது சுகாதாரமுள்ள மாநிலமாக கேரளாவும் சுகாதாரமற்ற மாநிலமாக உத்தரப் பிரதேசமும் இருக்கின்றது என்று கூறுகின்றது.
  • இதில் தமிழ்நாடு 9வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • கேரளாவில் பச்சிளங் குழந்தை இறப்பு விகிதமானது (Neo-natal mortality rate - NMR) உயிருடன் இருக்கும் 100 குழந்தைகளில் 6 குழந்தையாக இருக்கின்றது. ஒடிசாவில் இந்த விகிதம் 32 ஆக இருக்கின்றது.
  • ஒட்டு மொத்த செயல்பாடுகளில் சிறிய மாநிலங்களின் வரிசையில் மிசோரம் முதலிடத்திலும் மணிப்பூர் இரண்டாவது இடத்திலும் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • ஒட்டு மொத்த செயல்பாடுகளில் ஒன்றியப் பிரதேசங்களின் வரிசையில் சண்டிகர் மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி ஆகியவை முன்னிலையில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்