சுகாதார அமைச்சகமானது டெல் மற்றும் டாடா அறக்கட்டளையுடன் கூட்டிணைவு
September 21 , 2018 2481 days 911 0
தொற்றா நோய்கள் மீது தேசிய அளவிலான தடுப்பு, கட்டுப்பாடு, பாதிப்பு குறித்த ஆய்வு மற்றும் (NCDs - Non-Communicable Diseases) மேலாண்மை திட்டம் ஆகியவற்றிற்கான ஒரு தொழில்நுட்ப தளத்தை வழங்குவதற்காக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமானது டாடா அறக்கட்டளை மற்றும் டெல் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சகமானது டெல் நிறுவனத்தை தொழில்நுட்ப பங்காளராகவும் டாடா அறக்கட்டளையை பணியில் ஈடுபடுத்தும் பங்காளராகவும் பயன்படுத்துகிறது.
இது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் விரிவான முதன்மை NCD திட்டத்தில் சுகாதார தொழில் நுட்ப மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.