TNPSC Thervupettagam

சுகாதார சேவையில் நான் முதல்வன் திட்டத்தின் விரிவாக்கம்

November 26 , 2025 16 hrs 0 min 30 0
  • சுகாதாரச் சேவைத் துறையில் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காக செவிலியர் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார அறிவியல் துறைகளுக்கு நான் முதல்வன் திட்டத்தினை தமிழ்நாடு அரசு விரிவுபடுத்தியுள்ளது.
  • இந்தப் புதிய முன்னெடுப்பின் கீழ், நவீன மருத்துவமனை சூழல்களில் அவசியமான தகவல் தொடர்பு திறன் மற்றும் டிஜிட்டல் திறன்களில் மாணாக்கர்கள் சிறப்புப் பயிற்சி பெறுவார்கள்.
  • தமிழ்நாடு ஒரு முக்கிய மருத்துவச் சுற்றுலா மையமாக இருப்பதால், மாணாக்கர்கள்  மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுடன் திறம்பட தொடர்பு கொள்ள உதவுவதையும், வெளிநாடுகளில் வாய்ப்புகளை மேம்படுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பயிற்சி பெற்ற மாணாக்கர்கள் தங்கள் சுயவிவரங்களைப் பதிவேற்றுவதற்கு TNSkill Registry என்ற இலவச வலை தளத்தினை TNSDC அறிமுகப்படுத்தியுள்ளது; இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட முதலாளிகள் அந்த விவரங்களைப் பார்த்து அவர்களின் ஒப்புதலுடன் பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்