சுகாதார நல வசதிகளில் WASH சேவையின் முன்னேற்றம் 2000-2021
September 5 , 2022 1081 days 582 0
UNICEF மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து WASH சேவை குறித்த (தண்ணீர், துப்புரவு மற்றும் ஆரோக்கியம்) முன்னேற்றத்தைக் காண்பதற்காக இந்த அறிக்கையை வெளியிட்டன.
உலகில் 50 சதவீதத்திற்கும் அதிகமான சுகாதார மையங்களில் அடிப்படை சுகாதாரச் சேவைகள் இல்லாததால் கிட்டத்தட்ட 4 பில்லியன் மக்கள் ஒரு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
2030 ஆம் ஆண்டிற்குள், 46 குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் பொதுவான அடிப்படை WASH சேவைகளை 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான செலவில் பெற முடியும்.
இந்தியாவில் 38 சதவீத மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மட்டுமே அடிப்படை சுகாதார வசதிகள் உள்ளன.
உலக சராசரியை விட இந்தியாவில் 12 சதவீதம் குறைவான அடிப்படை சுகாதார வசதிகளே உள்ளன.
அரசு சாரா சுகாதார நிறுவனங்கள் இந்த அம்சத்தில் தெளிவான கண்காணிப்பினைக் கொண்டுள்ளன.
அரசு நிறுவனங்களில் உள்ள 32 சதவீத வசதிகளுடன் ஒப்பிடுகையில், 69 சதவீத வசதிகளுடன் தனியார் அடிப்படைச் சுகாதார அமைப்புகள் சிறப்பானச் சேவையைக் கொண்டுள்ளன.
சுகாதார நிலையங்களில் பாதுகாப்பான தண்ணீர் கிடைப்பதில் கிராமப்புறம்-நகர்ப் புறம் என்ற வேறுபாடு இருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
90 சதவீத நகர்ப்புற சுகாதார மையங்கள் பாதுகாப்பான தண்ணீரை வழங்குகின்ற அதே நேரத்தில் கிராமப்புறங்களில் 10 சதவீத மையங்கள் மட்டுமே இந்த வசதியை வழங்கச் செய்கின்றன.