சுட்டுரையில் "உங்கள் பட்ஜெட்டை அறியவும்" தொடர் - மத்திய நிதியமைச்சகம்
January 19 , 2019 2454 days 567 0
மத்திய நிதியமைச்சகம், ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும் முறை பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சுட்டுரையில் "உங்கள் பட்ஜெட்டை அறியவும்" என்ற தொடரை ஆரம்பித்திருக்கின்றது.
இந்த தொடர் பட்ஜெட்டில் உபயோகப்படுத்தப்படும் பல்வேறு வார்த்தைகளின் விளக்கங்களைக் கொண்டிருக்கும்.
இந்த தொடர் "மத்திய ஆண்டு நிதிநிலை அறிக்கை மற்றும் கணக்கின் மீதான வாக்கு" என்ற இரு வார்த்தைகளை விளக்குவதிலிருந்துத் தொடங்குகின்றது.
2019-20 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 01-ம் தேதி வெளியிட இருக்கின்றது.