சுண்ணாம்பு அடிப்படையிலான டிரைக்கோடெர்மா உயிரிப் பூச்சிக்கொல்லி
January 14 , 2024 732 days 474 0
கோழிக்கோட்டில் அமைந்துள்ள, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனமானது அளவில் சிறிய சுண்ணாம்பு அடிப்படையிலான டிரைக்கோடெர்மா கலப்பு என்ற பூஞ்சை உயிரி-கட்டுப்பாட்டுக் காரணியை உருவாக்கியுள்ளது.
‘ட்ரைக்கோலைம்’ என பெயரிடப்பட்ட இந்தக் கலப்பானது, ட்ரைக்கோடெர்மா மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அதன் மூலம் இதன் பயன்பாட்டினை மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு உதவுகிறது.
இது மண்ணில் பரவும் பல தாவர நோய்க்கிருமிகளை ஒடுக்குவதில் பயனுள்ளதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளதோடு, பயிர் உற்பத்தியில் வெற்றிகரமான உயிரி-பூச்சிக் கொல்லி மற்றும் உயிரி உரமாகவும் செயல்படுகிறது.
ட்ரைக்கோலைம், அதிக காலம் தேவைப்படும் இருபடி செயல்முறையின் தேவையை நீக்குகிறது.
இந்த சுண்ணாம்பு அடிப்படையிலான கலப்பானது, மண்ணின் அமிலத்தன்மையை நடுநிலையாக்குவதோடு, தாவர வளர்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் மண்ணில் பரவும் நோய்க்கிருமிகளிடமிருந்துப் பயிர்களைப் பாதுகாக்கிறது.