சமூக ஊடகங்களில் நிதி நுந்துநர்களால் (Influencer) வெளியிடப்பட்ட 1.2 லட்சத்திற்கும் அதிகமான தவறாக வழிநடத்தும் பதிவுகளை நீக்குவதற்கு, SEBI 'சுதர்சன்' என்ற செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பைப் பயன்படுத்தியது.
சுதர்சன் AI அமைப்பு என்பது இந்தியாவில் வங்கி மற்றும் நிதித் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பாகும்.
இது பெரிய நிதி தரவுத்தொகுப்புகளைச் செயலாக்குவதற்கும் முன்கணிப்பு நுண்ணறிவுகளை உருவாக்குவதற்கும் இயந்திர கற்றல் மற்றும் தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துகிறது.
இந்த அமைப்பு வங்கிகளுக்கு கடன் ஆபத்து மதிப்பீடு, கடன் மதிப்பீடு மற்றும் வாராக் கடன்களை முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதில் உதவுகிறது.
இது நிதி நிறுவனங்களில் மோசடி கண்டறிதல், பரிவர்த்தனை கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.