இந்தியக் கடலோரக் காவல் படையானது போர்ட் பிளேர் கடற்பகுதியில் “சுத்தமான கடல் - 2018” என்ற பெயர் கொண்ட பிராந்திய அளவிலான கடல்சார் எண்ணெய் மாசுக் கட்டுப்பாட்டு எதிர்வினைப் பயிற்சியை நடத்துகிறது.
இதன் நோக்கம் இந்தியக் கடலோரக் காவல் படை, எண்ணெய் வள நிறுவனங்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் விழிப்புடன் இருப்பதை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்டது.
மிக முக்கிய எண்ணெய்க் கசிவிற்கு எதிர்வினையாற்ற தயார் நிலையில் இருத்தலானது தேசிய எண்ணெய்க் கசிவுப் பேரிடர் தற்செயல் திட்டத்தின் (NOS-DCP - National Oil Spill Disaster Contingency Plan) சிறப்பம்சங்களுடன் ஒன்றிப் பொருந்துமாறு உள்ளது.
இந்தியாவின் கடல்சார் மண்டலங்களின் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கடலோரக் காவற்படையானது பொறுப்பு வகிக்கிறது.
இந்தியக் கடற்பகுதியில் எண்ணெய்க் கசிவிற்கு எதிர்வினையாற்றுவதற்கான ஒத்துழைப்பு நிறுவனம் இதுவாகும்.
இது (ICG – Indian Coast Guard) NOS-DCP-ஐ உருவாக்கியுள்ளது. மேலும் இது மும்பை, சென்னை மற்றும் போர்ட் பிளேயர் ஆகிய இடங்களில் 3 மாசுக் கட்டுப்பாட்டு எதிர்வினை மையங்களையும் உருவாக்கியுள்ளது.