TNPSC Thervupettagam

சுந்தரவனப் புலிகள் வளங்காப்பக விரிவாக்கம்

August 27 , 2025 10 days 63 0
  • சுந்தரவனப் புலிகள் வளங்காப்பகத்தில் கூடுதலாக 1,044.68 சதுர கிலோமீட்டர் பரப்பினைச் சேர்க்க தேசிய வனவிலங்கு வாரியம் (NBWL) ஒப்புதல் அளித்தது.
  • காப்பகத்தின் மொத்தப் பரப்பளவு ஆனது தற்போது 3,629.57 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளதுடன், இது இந்தியாவின் இரண்டாவது மிகவும் பெரிய புலிகள் வளங் காப்பகமாக மாறியுள்ளது.
  • ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 5,937 சதுர கிலோமீட்டர் கொண்ட நாகார்ஜுனசாகர் ஸ்ரீசைலம் புலிகள் வளங்காப்பகம் இந்தியாவின் மிகப்பெரிய வளங்காப்பகமாக உள்ளது.
  • தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மாட்லா, ராய்டிகி மற்றும் ராம்கங்கா மலைத்தொடர்கள் இந்த வளங்காப்பகப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • முதலில் நிர்ணயிக்கப்பட்ட வளங்காப்பகமானது 1,699.92 சதுர கிலோமீட்டர் பரப்பிலான மையப் பகுதியையும் 885.27 சதுர கிலோமீட்டர் இடையகப் பகுதியையும் கொண்டிருந்தது.
  • 2022 ஆம் ஆண்டில், வளங்காப்பகத்திற்குள் 81 புலிகளும், தெற்கு 24 பர்கானாக்களின் சுற்றியுள்ள பகுதிகளில் 20 புலிகளும் பதிவாகின.
  • இந்தியாவில் 58 புலிகள் வளங்காப்பகங்கள் உள்ளன என்பதோடு மேலும் சுந்தரவனக் காடுகள் வளங்காப்பகமானது அளவில் ஏழாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது.
  • 1973 ஆம் ஆண்டு புலிகள் வளங்காப்புத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்த வளங் காப்பகத்திற்குள் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட ஒரு தேசியப் பூங்கா அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்