மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது “சுனவ்டி” என்ற அடுத்தத் தலைமுறை ஸ்டார்ட் அப் சவால் போட்டியைத் தொடங்கியுள்ளது.
இது இந்தியாவில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களின் மீது சிறப்புக் கவனம் செலுத்துவதுடன் மென்பொருள் சாதனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா மையங்களின் மூலம் அரசிடமிருந்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட இருக்கின்றன.