'சுனாமி தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் உள்ள' கிராமங்கள்
November 25 , 2024 249 days 295 0
ஒடிசாவில் உள்ள இருபத்தி நான்கு கடலோரக் கிராமங்கள் யுனெஸ்கோ அமைப்பின் அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையத்தினால் 'சுனாமி தாக்குலை மிக நன்கு எதிர் கொள்வதற்கு தயாராக உள்ளவை' என அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் நடைபெற்ற 2வது உலகளாவிய சுனாமி கருத்தரங்கின் போது இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மேலும், ஒடிசா மாநிலத்தில் உள்ள இரண்டு கிராமங்களின் ‘சுனாமி தாக்குதலை எதிர் கொள்வதற்குத் தயார் நிலையில் உள்ள கிராமங்கள்’ என்ற அங்கீகாரச் சான்றிதழ்கள் புதுப்பிக்கப்பட்டன.
அவை 2020 ஆம் ஆண்டில் சுனாமி தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் உள்ள கிராமங்களாக அங்கீகரிக்கப்பட்டன.
ஒடிசா மாநிலத்தில் 381 கிராமங்களில் சுனாமி பாதிப்பு அபாயம் உள்ளதாக அரசு அடையாளம் கண்டுள்ளது.