சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புராஸ்கர் விருது 2020
January 25 , 2020 2011 days 826 0
மத்திய உள்துறை அமைச்சகமானது 2020 ஆம் ஆண்டிற்கான சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புராஸ்கர் விருது பெறும் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
இந்த விருதானது நிறுவனப் பிரிவில் உத்தரகாண்ட் மாநிலத்தின் பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை மையத்திற்கும் தனிநபர் பிரிவில் குமார் முன்னன் சிங் என்பருக்கும் வழங்கப்பட உள்ளது.
இது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23 ஆம் தேதியன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிக்கப் படுகின்றது.
இந்த விருதானது பேரிடர் மேலாண்மைத் துறையில் இந்தியாவில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் செய்த சிறந்தப் பணிகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
குமார் முன்னன் சிங், 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது செய்த பாராட்டத் தக்கப் பணிகளை அங்கீகரிப்பதற்காக 2005 ஆம் ஆண்டில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிறுவன உறுப்பினராக நியமிக்கப் பட்டார்.