சுய தீங்கு விளைத்தல் குறித்த விழிப்புணர்வு தினம் - மார்ச் 01
March 6 , 2024 507 days 387 0
தமக்குத் தாமே காயப்படுத்திக் கொள்ளும் மற்றும் தொழில்முறை உதவியைக் கோருவதில் தயங்குகின்ற நபர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
உடல் நலனுக்கு ஒவ்வாத இந்த நடத்தை முறையை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நோயாளிகள் விரைவில் உதவி பெறவும் இது உதவுகிறது.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மனநோய்க்கான அறிகுறிகளில் ஒன்றாக சுய-தீங்கு விளைவித்தல் நடத்தை அறிவிக்கப்பட்டது.
1995 ஆம் ஆண்டில், சுய சிதைவு பற்றிய முதல் சர்வதேச மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டது.
1997 ஆம் ஆண்டில், சுய காயம் பற்றிய ஆய்வுக்கான சர்வதேச சங்கம் நிறுவப்பட்டது.