TNPSC Thervupettagam

சுரக்சித் சாகர் பிரச்சாரம்

September 20 , 2026 5 hrs 0 min 30 0
  • கடல் குப்பைகளை அகற்றுதல் மற்றும் கடலோரப் பாதுகாப்பிற்காக 5-வது பதிப்பான 'ஸ்வச் சாகர், சுரக்சித் சாகர்' (SSSS) 2026 பிரச்சாரமானது 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று தொடங்கப்பட்டது.
  • ஒரு வாரம் நடைபெறும் இப்பிரச்சாரம் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 முதல் 19 வரை நடைபெற்று, சர்வதேச கடலோர தூய்மை தினத்துடன் முடிவடைகிறது.
  • இப்பிரச்சாரம் இந்தியாவின் 11,098 கி.மீ கடற்கரையோரத்தில் 100க்கும் மேற்பட்ட கடற்கரைகளில் தூய்மைப்படுத்தும் பணிகளை உள்ளடக்கியுள்ளது.
  • கடலோர அரிப்பு மற்றும் கடல்நீரின் தரத்தைக் கண்காணிப்பதற்கான புவி அறிவியல் அமைச்சகத்தின் பிரித்வி (PRITHVI) திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான பதிப்பில் இளைஞர்களுக்கான முதல் தேசிய பெருங்கடல் ஒலிம்பியாட் (Ocean Olympiad) அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இம்முயற்சியானது 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்