சுற்றுச்சூழலுக்கான GEP குறியீடு – உத்தரகாண்ட்
July 28 , 2024
300 days
348
- மொத்த சுற்றுச்சூழல் உற்பத்தி (GEP) எனப்படும் நான்கு இயற்கை வளங்களுக்கு மதிப்பீடுகளை ஒதுக்கும் நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறியுள்ளது.
- GEP குறியீடு ஆனது நான்கு முக்கிய கூறுகளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தரத்தை மதிப்பிடுகிறது. அவை
- நீர்: மாநிலத்தில் உள்ள நீர் வளங்களின் தரம் மற்றும் இருப்பை மதிப்பிடுகிறது.
- காற்று: காற்றின் தரம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தில் மாசுபாட்டின் தாக்கத்தை மதிப்பிடுகிறது.
- காடு: காடுகளின் பரவல், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் வன சுற்றுச்சூழல் அமைப்புகளின் வளம் ஆகியவற்றை மதிப்பிடுகிறது.
- மண்: வளம் மற்றும் அரிப்பு மற்றும் சிதைவின் தாக்கம் உள்ளிட்ட மண் வளத்தினை ஆய்வு செய்கிறது.
- GEP குறியீடானது 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான ஒரு ஒப்பீட்டுத் தரவைப் பிரதிபலிப்பதோடு, ஜிடிபியில் இதன் மதிப்புகள் 0.9% அதிகரிப்பையும் காட்டுகிறது.

Post Views:
348