கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக அறிவியலாளர்கள், சூரிய ஒளியை மட்டும் பயன்படுத்தி நெகிழிக் கழிவுகளை அசிட்டிக் அமிலமாக (வினிகர்) மாற்றும் வழியைக் கண்டறிந்துள்ளனர்.
இந்தச் செயல்முறை சூரிய ஒளியால் தூண்டப்படும் ஒரு வேதிவினைக்கு ஒளிச் சேர்க்கை செயல்முறையைப் பயன்படுத்துகிறது என்பதோடுமேலும் இது அறை வெப்பநிலையில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இன்றி நடைபெறுகிறது.
அவர்கள் பாலிவினைல் குளோரைடு (PVC), பாலி எத்திலீன் (PE), பாலி எத்திலீன் டெரெப்தாலேட் (PET) மற்றும் பாலிப்ரோப்பிலீன் (PP) ஆகிய நான்கு வகையான நெகிழியில் இந்தச் சோதனையைச் செய்துள்ளனர்.
இந்த முறையில் தயாரிக்கப்படும் அசிட்டிக் அமிலம் உணவு, மருந்து மற்றும் நெகிழி சார்ந்த தொழில்களில் பயன்படுத்தப்படலாம்.