சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான நீர் சுத்திகரிப்பு முறை
May 20 , 2024 540 days 376 0
விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய பெட்ரோலியம் & ஆற்றல் கல்வி நிறுவனம் (IIPE) ஆனது, மற்ற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து, ‘மென்சவ்வு மேற்பரப்பு மாற்ற நுட்பம்’ எனப்படும் ஒரு பயனுள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான தீர்வைக் கண்டறிந்துள்ளது.
பல்வேறு நிலைகளில் நீர்ச் சுத்திகரிப்பில், குறிப்பாக சேறு நிறைந்த நதி நீரின் சுத்திகரிப்பில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதனை நோக்கம் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருப்பதோடு, நச்சுத்தன்மையற்ற வாயுக்களைப் பயன்படுத்துகிறது.
இது மேற்பரப்பு மாற்றச் செயல்முறைகளில் கடுமையான இரசாயனங்கள் அல்லது கரைப்பான்களைப் பயன்படுத்துவதற்கானத் தேவையைக் குறைத்து சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைக்கிறது.
சேறு நிறைந்த நீர் ஆக்ஸிஜன் அளவைக் குறைப்பதோடு, சூரிய ஒளியைத் தடுத்து மாசுபடுத்திகளைக் கடத்துவதால் அதன் வாழ்விடத் தரமிழப்பு, உயிரினங்களின் இடப் பெயர்ச்சி மற்றும் நீர்வழி நோய்களின் பரவல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.