'சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் அறிக்கை (ETR) 2021: சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள், நெகிழ்ச்சி மற்றும் அமைதியைப் புரிந்து கொள்வது'
October 13 , 2021 1401 days 608 0
இதைப் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் வெளியிட்டது.
உணவு ஆபத்து, நீர் ஆபத்து, விரைவான மக்கள்தொகை வளர்ச்சி, வெப்பநிலை முரண்பாடுகள் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் தொடர்பான அச்சுறுத்தல்களுக்காக 178 நாடுகளில் உள்ள துணை தேசிய நிர்வாக அலகுகளின் தரவை இது மதிப்பீடு செய்தது.
மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகள் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா, துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா ஆகிய பகுதிகளில் காணப் படுகின்றன.
ஒரு பிராந்தியமாக, தெற்கு ஆசியாவானது தண்ணீர் மற்றும் உணவு அபாயங்களுடன் மிக மோசமான நிலையில் உள்ளது.