சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நட்சத்திர மதிப்பீட்டு முறை
January 23 , 2022
1194 days
558
- சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகமானது சமீபத்தில் ஒரு "நட்சத்திர மதிப்பீட்டு முறையை" அறிமுகப்படுத்தியது.
- குறுகிய காலத்தில் சுற்றுச்சூழல் அனுமதிகளை ஒரு திறம் மிக்க முறையில் வழங்கும் மாநிலங்களை இந்த அமைச்சகம் கண்டறியும்.
- இந்த அமைச்சகமானது, அத்தகைய மாநிலங்களுக்கு ஊக்கச் சலுகைகளை வழங்கி ஊக்குவிக்கும்.
- இதற்காக, நட்சத்திர மதிப்பீட்டு முறையானது மாநிலங்களுக்கு ஏழு என்ற அளவீட்டில் மதிப்பெண்களை வழங்குகிறது.
- ஒரு திட்டத்திற்கு அனுமதி வழங்கும் செயல்முறையை 80 நாட்களுக்குள் முடிக்கும் மாநிலங்கள் இரண்டு மதிப்பெண்களைப் பெறுகின்றன.
- 105 நாட்களில் முடிப்பதற்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
- இந்தக் காலத்தை விட அதிகமாக எடுத்துக் கொண்டால் பூஜ்ய மதிப்பெண் வழங்கப் படும்.
- ஆய்விற்கு உட்பட வேண்டிய திட்டங்கள் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், ஒரு மதிப்பெண் வழங்கப் படுகிறது.
Post Views:
558