சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் தொடர்பான தீர்ப்பு
May 3 , 2023 993 days 586 0
உச்ச நீதிமன்றமானது, பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான 1 கி.மீ. வரையிலான இடையக (தாங்கு) மண்டலம் தொடர்பான தனது தீர்ப்பினை மாற்றியமைத்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூன் 03 ஆம் தேதியன்று, நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட காடுகள், தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்குச் சரணாலயங்களைச் சுற்றி குறைந்த பட்சம் ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் (ESZ) கட்டாயமாக வரையறுக்கப் பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதி B.R. கவாய் தலைமையிலான அமர்வானது சுற்றுச்சூழல் உணர்திறன் தாங்கு மண்டலங்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்றும், அது அந்தந்த “பாதுகாக்கப்பட்ட பகுதி சார்ந்ததாக” இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
மேலும், இது 1 கிலோமீட்டர் சுற்றளவிலான சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களில் உள்ள பகுதிகளில் சாலைகள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளை கட்டமைக்கக் கூடாது என அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.
இந்தப் பகுதிகளுக்குள் சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.