சுற்றுச்சூழல் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
October 9 , 2018 2632 days 1046 0
நீடித்த வளர்ச்சியின் சுறறுச்சூழல் பரிமாணத்தில் ஒங்கிணைந்து செயல்படுவதற்காக இந்திய தொழிலக கூட்டமைப்பானது (CII - Confederation of Indian Industry) ஐ.நா. சுற்றுச்சூழலுடன் (UN Environment) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது CII மற்றும் ஐ.நா. ஆகிய இரண்டிற்குமிடையே விருப்பமான பொதுவான துறைகளில் உள்ள முக்கியமானவற்றை உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் CII மற்றும் ஐ.நா-வால் #ஐ.நா நெகிழி முன்முயற்சி (#Un-plastic Initiative) எனும் பிரதானமான செயல்பாடு திட்டமிடப்பட்டுள்ளது.
இது பிளாஸ்டிக் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைளை எடுக்க தொழிலகங்களின் வாக்குறுதிகளை உள்ளடக்கிய ‘நடவடிக்கைக்கான அழைப்புடன்’ தொடங்கும்.