2025 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தணிக்கை விதிகள், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகள் சுற்றுச்சூழல் தணிக்கைகளை மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் (SPCBs) அதிகார வரம்பினை மீறிச் செயல்பட அனுமதிக்கின்றன.
இந்தப் புதிய கட்டமைப்பின் கீழ், தனியார் நிறுவனங்கள் தற்போது உரிமம் பெற்ற சுற்றுச்சூழல் தணிக்கையாளர்களாக அங்கீகாரம் பெறலாம்.
சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு தரநிலைகளுடன் இணங்குவதை தணிக்கையாளர்கள் மதிப்பிடுவார்கள்.
இந்த நடவடிக்கையானது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) மற்றும் SPCB போன்ற தற்போதைய ஒழுங்குமுறை அமைப்புகளில் மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்புப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்கிறது.