சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மை செயல்திட்டம் - கடலோர மாநிலங்கள்
August 21 , 2019 2188 days 716 0
சுற்றுச்சூழல் அமைச்சகமானது அனுமதி பெற விண்ணப்பிப்பதற்கு முன்னர் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள நம்பிக்கையான உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக ஒரு வரைவுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மை செயல்திட்ட வரைவானது உலக வங்கியினால் நிதியளிக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
கடலோர மண்டலங்களில் திட்டங்களை அங்கீகரிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் போது கடலோர மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை இந்த ஆவணம் வகுக்கின்றது.
திட்டங்களின் திட்டமிடல், வடிவமைப்பு, செயல்படுத்துதல் ஆகியவற்றில் “சுற்றுச்சூழல் மற்றும் சமூக அம்சங்கள்” எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதை இது விவரிக்கின்றது.
குஜராத், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று கடலோர மாநிலங்கள் உலக வங்கியின் உதவியுடன் கடலோர மண்டல மேலாண்மைத் திட்டங்களை ஏற்கெனவே தயாரித்துள்ளன.