சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வகையிலான ஆரவல்லிப் பூங்கா திட்டம்
February 22 , 2025 68 days 110 0
ஹரியானா அரசாங்கமானது, சுமார் 3,858 ஹெக்டேர் பரப்பில் சுற்றுப் பயணம் மேற் கொள்ளும் வகையிலான ஆரவல்லிப் பூங்கா திட்டத்தினை முன் வைத்துள்ளது.
இது உலகின் மிகப்பெரிய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வகையிலான பூங்காவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்மொழியப்பட்ட இந்தப் பூங்காவில் விலங்கு கூண்டுகள், விருந்தினர் இல்லங்கள், சில தங்கும் விடுதிகள், உணவகங்கள், கலையரங்கம், ஒரு விலங்கு மருத்துவமனை, குழந்தைகள் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், மீன்வளப் பூங்காக்கள், கம்பிவட வாகனச் சேவைகள், கண்காட்சிகளுடன் கூடிய ஒரு சுரங்கப்பாதை நடைபாதை, ஒரு திறந்த வெளி திரையரங்கம் மற்றும் உணவகங்கள் இருக்கும்.
ஹரியானாவில் உள்ள சுமார் 80,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ஆரவல்லி மலைப் பகுதியில், மிகப் பெரும்பான்மையான பகுதிகள் பல்வேறு சட்டங்களின் கீழும் உச்ச நீதிமன்றம் மற்றும் NGT உத்தரவுகளின் கீழும் பாதுகாக்கப்படுகின்றன.