TNPSC Thervupettagam

சுழிய உமிழ்வு குறித்த நிதி ஆயோக் அறிக்கை

February 16 , 2026 17 hrs 0 min 57 0
  • “விக்சித் பாரத் மற்றும் சுழிய உமிழ்வை நோக்கிய சூழல்கள்” குறித்து NITI ஆயோக் 11 அறிக்கைகளை வெளியிட்டது.
  • 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கும், 2070 ஆம் ஆண்டுக்குள் நிகர சுழிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அடைவதற்கும் இந்த அறிக்கைகள் வழிவகைகளை முன் வைக்கச் செய்ன்றன.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2025 ஆம் ஆண்டில் உள்ள 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2047 ஆம் ஆண்டில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இறுதிகட்ட எரிசக்தித் தேவையில் மின்சாரத்தின் பங்கு 2025 ஆம் ஆண்டில் 21%-இல் இருந்து 2070 ஆம் ஆண்டில் 60% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 2070 ஆம் ஆண்டில் சுமார் 6,000 ஜிகாவாட்களை (GW) தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 8 GW ஆக இருக்கும் அணுசக்தி திறன் 2070 ஆம் ஆண்டில் 300 GW க்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நிகர சுழிய உமிழ்வுப் பாதைக்கு 2070 ஆம் ஆண்டுக்குள் 22.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்பதோடு ஒவ்வொரு ஆண்டிற்கான முதலீட்டுத் தேவை சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்