வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது சுவச் சர்வேக்சன் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இது உலகின் மிகப்பெரிய நகரத் தூய்மைக் கணக்கெடுப்பின் 7வது தொடர் பதிப்பு ஆகும்.
இந்தத் திட்டமானது, “மக்களுக்கே முன்னுரிமை” என்ற ஒரு கருத்தை அதன் இயக்கத் தத்துவமாகக் கொண்டு, முன்களப் பணியாளர்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்காக நகரங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைத் திரட்டுவதற்காக வடிவமைக்கப் பட்டு உள்ளது.