TNPSC Thervupettagam

சுவச் சர்வேக்சன் 2020 தரவரிசை

August 26 , 2020 1826 days 796 0
  • இது 28 நாட்கள் என்ற அளவில் முழுவதும் டிஜிட்டல் முறையில் நடைபெற்ற மற்றும் காகிதமற்ற ஒரு தேசிய அளவிலான ஆய்வாகும். மேலும் இது உலகின் மிகப்பெரிய ஒரு தூய்மை ஆய்வாகவும் விளங்குகின்றது.
  • இந்தூர் நகரமானது தொடர்ந்து நான்காவது முறையாக தூய்மையான இந்திய நகரம் என்ற நிலையைத் தக்க வைத்துள்ளது. இதற்கு அடுத்து இந்த தரவரிசையில் சூரத்  2வது இடத்திலும் நவி மும்பை 3வது இடத்திலும் உள்ளது.

இதர வெற்றியாளர்கள்

  • இந்தியாவின் தூய்மையான தலைநகரம் – புது தில்லி மாநகராட்சிக் கழகம், புது தில்லி
  • இந்தியாவின் தூய்மையான சிறு நகரம் – அம்பிகாபூர், சத்தீஸ்கர்
  • இந்தியாவின் தூய்மையான நடுத்தர நகரம் – மைசூரு, கர்நாடகா
  • இந்தியாவின் தூய்மையான பெரு நகரம் – விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம்
  • இந்தியாவின் தூய்மையான மிகப்பெரும் நகரம் – அம்தாவத், குஜராத்
  • இந்தியாவின் தூய்மையான நகரம் (1 இலட்சம் மக்கள் தொகைக்குக் கீழ்) – கராத், மகாராஷ்டிரா

தமிழ்நாட்டில்

  • தமிழ்நாட்டில் உள்ள தூய்மையான நகரம் கோயம்புத்தூர் ஆகும். இது 40வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இதில் மதுரை மற்றும் சென்னை ஆகியவை முறையே 42வது மற்றும் 45வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • திருச்சி 102வது இடத்தையும் திருநெல்வேலி 159வது இடத்தையும் சேலம் 173வது இடத்தையும் திருப்பூர் 173வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • புத்தாக்கம் மற்றும் சிறந்த நடைமுறைகளில் சிறந்து விளங்கும் மிகப்பெரிய நகரம்சென்னை, தமிழ்நாடு.
  • மேலே குறிப்பிட்ட தரவரிசையில் தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு நகரமும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற வில்லை.

பிரிவு

வெற்றியாளர்

100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறைவாக உள்ள மாநிலங்கள்

ஜார்க்கண்ட்

ஹரியானா

உத்தரகாண்ட்

100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்கள்

சத்தீஸ்கர்

மகாராஷ்டிரா

மத்தியப் பிரதேசம்

தேசியத் தரவரிசை (நகரங்கள் 1 – 10 இலட்சம்)

அம்பிகாபூர் – சத்தீஸ்கர்

மைசூரு - கர்நாடகா

புது தில்லி

கங்கைக் கரையோர நகரங்கள் தரவரிசை

சுனார் (50 ஆயிரத்திற்குக் குறைவாக மக்கள் தொகை கொண்டது)

கன்னோஜ் (50 ஆயிரம் இலட்சம் மக்கள் தொகை)

வாரணாசி (1 இலட்சம் மக்கள் தொகைக்கு மேல்)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்