ஹைதரபாத்தின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகமானது “சுவரஜ்பிலிட்டி” என்ற தளத்தின் பீட்டா வடிவத்தினை வெளியிட்டுள்ளது.
இது மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான திறன்களைப் பெறவும் வேலை வாய்ப்பினைக் கண்டறியவும் வேண்டி அவர்களுக்கு உதவக் கூடிய வகையில், செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் வேலைவாய்ப்புத் தளமாகும்.
இந்தக் கல்வி நிறுவனமானது யூத்4ஜாப்ஸ், விஷூவல் குவெஸ்ட் மற்றும் கோடக் மகிந்திரா வங்கி லிமிடெட் (Youth4Jobs, Visual Quest, and Kotak Mahindra Bank Ltd) ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் தளத்தினை உருவாக்கியுள்ளது.