சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய பெண்களிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் நோயின் ஆரம்பகால நிலை பற்றிய அறிதலை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்காக “சுவஸ்த் நாரி – சக்தி ஹமாரி” என்ற பிரச்சாரத்தை இந்திய புற்றுநோய் சமூகம் (Indian Cancer Society - ICS) தொடங்கியுள்ளது.
இது உலக புற்றுநோய் தினத்தின் (பிப்ரவரி 4) போது தொடங்கப்பட்டது.
இது மருந்தக நிறுவனமான அஸ்திரா செனிகாவுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டது.
இது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற அதிக பாதிப்புள்ள பகுதிகளில் உள்ள பெண்களுக்காக இலவச மற்றும் சிறப்புப் புற்றுநோய் ஆய்வு முகாம்களை நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.