சுவாமித்துவ யோஜனா (உரிமைத் திட்டம்)
April 28 , 2020
1910 days
759
- ஏப்ரல் 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் தினத்தின் போது பிரதமர் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார்.
- இது கிராமங்களில் குடியிருப்பு நில உரிமையைத் வரைபடமிடுவதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
- இது பிரச்சினைகளற்ற ஒரு பதிவேட்டை உருவாக்குவதற்காக ஆளில்லா குட்டி விமானங்களைப் பயன்படுத்தி நிலங்களை அளவிட இருக்கின்றது.
- கிராமங்களில் உள்ள அனைத்துச் சொத்துகளுக்கான சொத்து அட்டையானது அந்தந்த மாநிலங்களால் தயாரிக்கப்பட இருக்கின்றது.
- இந்தத் திட்டமானது இந்தியாவில் சொத்துப் பதிவேடுப் பராமரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
- இது ஆளில்லா குட்டி விமானங்கள் மற்றும் சமீபத்திய ஆய்வு முறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி கிராமப்புற வாழ்விட நிலங்களை அளவிடுவதற்கு உதவுகின்றது.
- இந்தத் திட்டமானது மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளது.
- இந்தத் திட்டமானது கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் தொடங்கப் பட்டுள்ளது.
Post Views:
759