சுவிஸ் மற்றும் இந்தியா: தானியங்கித் தகவல் பரிமாற்றம்
September 2 , 2019 2176 days 746 0
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் சுவிட்சர்லாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் தானியங்கித் தகவல் பரிமாற்றம் (AEOI - The automatic exchange of information) தொடங்கியது.
இதன் மூலம், சுவிட்சர்லாந்தில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் வங்கி விவரங்கள் இந்திய வரித் துறை அதிகாரிகளுக்கு கிடைக்கும்.
2018 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் உள்ள இந்தியக் குடியிருப்பாளர்களால் வைக்கப் பட்டிருக்கும் (அல்லது மூடப்பட்ட) நிதிக் கணக்குகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் இந்தியா பெறும்.
AEOI என்பது நாடுகளுக்கிடையில் கோரிக்கை ஏதும் வைக்காமல் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதாகும்.
இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று AEOI இல் கையெழுத்திட்டுள்ளன.