TNPSC Thervupettagam

சுவிஸ் வங்கிகளில் இந்திய நிதிகள் 2024

June 24 , 2025 2 days 48 0
  • சுவிஸ் வங்கிகளில் 2024 ஆம் ஆண்டில், இந்திய நிதிகள் மூன்று மடங்கு அதிகரித்து 3.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் (CHF) ஆக (37,600 கோடி ரூபாய்) உயர்ந்தது.
  • பெரும்பாலான இவ்வதிகரிப்பானது தனிப்பட்ட வாடிக்கையாளர் கணக்குகளிலிருந்து இல்லாமல் சில வங்கிசார் வழிகள் மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்கள் வைத்திருந்த நிதிகளிலிருந்து வந்தது.
  • சுவிஸ் வங்கிகளில் மொத்த இந்தியப் பணம் 3.83 பில்லியன் CHF மதிப்பினை எட்டிய 2021 ஆம் ஆண்டிற்குப் பிறகு இது மிக உயர்ந்த அதிகரிப்பாக உள்ளது.
  • சுவிஸ் வங்கிகளில் உள்ள மொத்த இந்தியப் பணம் ஆனது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3.83 பில்லியன் CHF மதிப்பினை எட்டியது.
  • சுவிஸ் வங்கிகளில் உள்ள நிதிகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு 67வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது உலகளவில் 48வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்