August 7 , 2019
2179 days
815
இந்தியாவில் இராஜதந்திர உறவிற்கு ஒத்துணர்வு மற்றும் மனித அணுகுமுறையை கொண்டு வந்ததற்காக பாராட்டப்பட்ட 67 வயது நிரம்பிய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் காலமானார்.
சுஸ்மா சுவராஜ் பின்வருவனவற்றில் முதலாவதாகத் திகழ்ந்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் இந்தியாவின் இளம் வயது கேபினெட் அமைச்சர் (1977 ஆம் ஆண்டில் அவருடைய வயது 25)
1998 ஆம் ஆண்டில் தில்லியின் முதலாவது பெண் முதலமைச்சர்.
நாட்டில் உள்ள தேசிய அரசியல் கட்சியின் முதலாவது பெண் செய்தித் தொடர்பாளர்.
இந்திரா காந்திக்குப் பின்பு வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்த இரண்டாவது பெண் (2014-19)
தலைசிறந்த நாடாளுமன்றவாதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தின் முதலாவது மற்றும் ஒரே பெண் நாடாளுமன்ற உறுப்பினர்.
பிஜேபியின் முதலாவது பெண் முதலமைச்சர், மத்திய அமைச்சர், பொதுச் செயலாளர், செய்தித் தொடர்பாளர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்.
சோனியா காந்திக்குப் (1999 – 2004) பின்பு மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவராகப் பதவி வகித்த இரண்டாவது பெண் சுஸ்மா சுவராஜ் (2009 – 14) ஆவார்.
Post Views:
815