சுஹானி ஷா - FISM 2025 விழாவில் ‘மாயவித்தைக்காரர்களுக்கான ஆஸ்கார்’ வென்ற முதல் இந்தியர்
July 26 , 2025 12 hrs 0 min 11 0
இராஜஸ்தானைச் சேர்ந்த சுஹானி ஷா, Fédération Internationale des Sociétés Magiques (FISM) சங்கத்தின் ‘சிறந்த மாயவித்தைக்காரர் 2025’ விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
இது இயங்கலை வழி மாயவித்தை கலைப் பிரிவில் அவரது சிறப்பை அங்கீகரிக்கிறது.
இது மாயவித்தை கலைஞர்களுக்கான ஆஸ்கார் விருதுகள் என்று பிரபலமாக அறியப் படுகிறது.
இந்த விருதானது இத்தாலியின் டொரினோவில் நடைபெற்ற மதிப்புமிக்க FISM உலக சாம்பியன்ஷிப் விழாவில் வழங்கப் பட்டது.
FISM உலக மாயவித்தை சாம்பியன்ஷிப் என்பது Fédération Internationale des Sociétés Magiques என்ற அமைப்பால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப் படும் ஒரு சர்வதேசப் போட்டியாகும்.
1948 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட FISM, மாயவித்தை கலைஞர்களுக்கான மிக உயர்ந்த உலகளாவியத் தளமாகக் கருதப்படுகிறது.