2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் உலகளவில் 451,000 அதிக வெப்பம் தொடர்பான இறப்புகளை ஒரு வலுவான எல் நினோ ஏற்படுத்தக் கூடும் என்று சிகாகோ பல்கலைக் கழகம் தலைமையிலான ஆய்வு கணித்துள்ளது.
நைஜீரியாவில் சுமார் 31,400 கூடுதல் இறப்புகளுடன், உலகிலேயே அதிக வெப்பம் தொடர்பான இறப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் சாஹேல் பகுதி மிகவும் பாதிக்கப்படும் பகுதியாக இருக்கும் என்றும், நைஜீரியா, சூடான், நைஜர் மற்றும் சாட் ஆகிய நாடுகள் அதிக அபாயங்களை எதிர் கொள்ளும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
இந்த நான்கு நாடுகளும் இணைந்து சுமார் 66,800 கூடுதல் வெப்பம் தொடர்பான இறப்புகளை சந்திக்க நேரிடும்.
இந்த ஆய்வு 24,378 பிராந்தியங்களில் உள்ள வெப்பநிலை மற்றும் இறப்புத் தரவுகளை பகுப்பாய்வு செய்து, கணிக்கப்பட்ட இறப்புகளை 1996-2025 சராசரியுடன் ஒப்பிட்டு உள்ளது.
எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக வெப்பமடைந்து, உலகளாவிய வானிலை முறைகளை பாதிக்கும் ஒரு பருவநிலை நிகழ்வாகும்.
ஒரு வலுவான அல்லது "சூப்பர்" எல் நினோ பல பகுதிகளில் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும், மேலும் வெப்ப அலைகள், வறட்சி மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகளை மோசமாக்கக் கூடும்.