மத்திய உள்துறை அமைச்சகமானது அவசரகால இந்தியக் கணினி மீட்புக் குழுவின் எச்சரிக்கையை மேற்கோள்காட்டி “சூம் செயலி” (Zoom App) எனும் செயலி குறித்து எச்சரித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இணையவழி ஒத்துழைப்பு மையமானது (Cycord) சூம் செயலியின் பயன்பாடு குறித்து எச்சரித்துள்ளது.
சூம் செயலி என்பது காணொளி மற்றும் குரல் ஆகியவற்றின் மூலம் அதன் பயனர்களைச் சந்திக்க அனுமதிக்கும் இணையத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு காணொளிக் கூறாகும்.
அரசு அலுவலர்கள், தங்களது அலுவலகப் பயன்பாட்டிற்கு சூம் செயலியைப் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Cycord ஆனது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது இணைய வழிக்கான ஒரு ஒற்றை வழி தீர்வுத் தளமாக இணைய வழிக் குற்றங்களைக் கையாளுவதற்கான தீர்வுகளைக் கண்டுபிடித்தல், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்காக தொடங்கப் பட்டுள்ளது.